30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 800 விஸ்கி போத்தல்களுடன் நால்வர் கைது!!

470

arrest (1)

30 இலட்ச ரூபாய் பெறுமதியான 800 விஸ்கி போத்தல்களை மதுவரி விஷேட ஒழிப்பு பிரிவினரும்,பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.நாரஹேன்பிட்டி பகுதியில் பைப் வீதியில் உள்ள ஓர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களில் இருந்தே இந்த மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மதுபானங்களுடன் குறித்த வாகனங்களில் இருந்த நால்வரையும் பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.