
உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலை குறைவடைந்துள்ள போதிலும் குறித்த எண்ணெய் இது வரை தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய விலை சூத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டீ.சி.ஜயசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, எண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், விலை குறைக்கப்பட்டுள்ள எண்ணெய் நாட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை உரிய வகையில் பிரித்து விநியோகிப்பதற்கு 45 தொடக்கம் 60 நாட்கள் செல்லும் என அவர் கூறியுள்ளார்.
எனினும், நாட்டில் எண்ணெய் விலையை அரசாங்கமே தீர்மானிப்பதாகவும், அமைச்சரவை அனுமதிக்காக தமது விலை சூத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டீ.சி.ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.





