தனது தாயை தந்தையே கொன்றதை பார்த்து பயத்தில் தூங்குவது போல் நடித்த சிறுமி!!

466

1 (14)

மும்பையில் 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை, தாயை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியதை பார்த்து பயத்தில் தூங்குவது போன்று நடித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த நிதின் பன்ட்கர் (37) தனது மனைவி சுரேகாவுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தம்பதியருக்கு சமிக்ஷா (9) என்ற மகளும், யுவ்ராஜ் (7) என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு நிதின் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.அப்போது தூங்கிக் கொண்டிருந்த சமிக்ஷா கண்விழித்து தனது தாய் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆனால் சத்தம் போட்டால் தன்னையும் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சிய சிறுமி தூங்குவது போன்று நடித்துள்ளார்.இந்நிலையில், நிதின் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.மறுநாள் காலை சிறுமி தனது அத்தை வீட்டிற்கு ஓடிச் சென்று தான் பார்த்த கொடுமையை விவரித்துள்ளார்.

உடனே நிதினின் வீட்டிற்கு ஓடி வந்த அந்த சிறுமியின் அத்தை அங்கு தனது சகோதரரும், அவரது மனைவியும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.பொலிசாரிடம் சிறுமி கூறுகையில், என் அப்பா அம்மாவின் மார்பு மீது அமர்ந்து அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். பின்னர் அம்மாவின் கழுத்தை கத்தியால் குத்தினார். பிறகு அப்பா துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.இதை பார்த்து பயந்த நான் தூங்குவது போன்று நடித்ததில் எப்பொழுது தூங்கினேன் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.