800 கிராம் எடையில் பிறந்த குழந்தை: காப்பாற்றி சாதித்த மருத்துவர்கள்!!

558

1 (2)

மதுரையில் மருத்துவமனை ஒன்றில் 800 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.மதுரை அருகே ஒத்தகடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தாமரைசெல்வி என்பவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து இறந்துள்ளது.இந்நிலையில் 3வது முறையாக கருத்தரித்த தாமரைசெல்வி மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.7 மாத கர்ப்பிணியான அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.

இதனிடையே 800 கிராம் எடை மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு நுரையீரல் நோய் மற்றும் இருதயத்தில் துவாரம் இருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து சுமார் 3 வார காலம் கண்ணும் கருத்துமாக சிகிச்சை அளித்து எந்த பக்கவிளைவுமின்றி குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

தற்போது தாயும் குழந்தையும் பூரண குணம் அடைந்து நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெற்றோர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் என்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையான ரூ.1.50 லட்சத்தை அந்த மருத்துவமனை நடத்தும் அறக்கட்டளையே ஏற்றுக்கொண்டுள்ளது.