
பீகாரில் வரதட்சணை கொடுக்காத காரணத்தால் கட்டிய மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த ரீட்டா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் அரியானா மாநிலத்தை சேர்ந்த டிகு படிகருக்கும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரு வீட்டார் சம்மத்துடன் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது.
மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாக புகுந்த ரீட்டா, மாமியார் வீட்டில் புகுந்த நாள் முதல் தினமும் சித்திரவதையை அனுபவித்து வந்தார். வரதட்சணையாக பைக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்க பணமும் மணமகன் கேட்டதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்காத காரணத்தால் கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் ஆபாச பட இயக்குனருக்கு ரூ. 7 இலட்சத்திற்கு விற்றுள்ளார்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த ரீட்டா தனக்கு நடந்த துன்பங்களை பொலிசாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் மணமகன் குடும்பத்தார் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மணமகன் டிகுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.





