தரவுகளையும் பல பில்லியன் ஆண்டுகள் பாதுகாப்பாக சேமிக்கும் முறைமை!!

467

360-tb-discs-last-for-13-8-billion-years-2

மனி­தர்­களால் உரு­வாக்கப் ­பட்ட அனைத்துத் தர­வு­க­ளை யும் பல பில்­லியன் ஆண்­டு­க­ளுக்கு பாது­காப்­பாக சேமிக்கக் கூடிய அதி உன்­னத சேமிப்பு முறை­மை­யொன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய சவு­தாம்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.

சூப்­பர்மேன் நினை­வக பளிங்கு என அழைக்­கப்­படும் சேமிப்பு முறை­மையில் தர­வுகள் கண்­ணாடிப் பளிங்கில் 3 மிக நுண்­ணிய கட்­ட­மைப்புப் பட­லங்­களில் லேசர் கதிரைப் பயன்­ப­டுத்தி 5 பரி­மாண கட்­ட­மைப்புகளில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

190 பாகை­யு­டைய இந்த சேமிப்பு முறை­மை­யா­னது 13.8 பில்­லியன் ஆண்­டு­க­ளுக்கு தர­வு­களை எது­வித பாதிப்பும் இல்­லாமல் பாது­காக்கக் கூடி­ய­தாகும். அத்­துடன் இந்த சேமிப்பு கண்­ணாடிப் பளிங்கு 1,000 பாகை செல்சியஸ் அளவான கடும் வெப்ப நிலையை தாங்கிக் கொள்ளக் கூடிய வல்லமையைக் கொண்டது.