வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்!!

493

 
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (18.02.2016) காலை 11.30 மணியளவில் வவுனியாவிலிருந்து தாண்டிக்குக்குளம் நோக்கி பயணித்த பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த பட்டா வாகனம் தாண்டிக்குளம் பாடசாலைக்கு அருகே வீதியின் மறுபக்கம் மாறுவதற்கு முற்பட்டசமயம் வவுனியாவிலிருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .

இவ் விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிலின் சாரதி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

20160218_110830 20160218_110841 20160218_110846 20160218_110850 20160218_110856 20160218_110905 20160218_111100 20160218_111146 20160218_111401