
அட்லீ தற்போது தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் தன் மனைவி ப்ரியாவிற்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்தாராம்.அது என்னவென்றால் ப்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏதும் சொல்லாமல் ஒரு காரில் அவரை அழைத்து சென்றாராம்.
ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரை நிறுத்த, அங்கு நடந்து கொண்டிருந்தது கபாலி படப்பிடிப்பாம், ஏனெனில் ப்ரியா தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அவரை சந்தோஷப்படுத்த பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்திடம் அழைத்து சென்றுள்ளார்.ப்ரியா பின் சூப்பர் ஸ்டாரின் காலில் விழுந்து ஆசி வாங்கி வந்துள்ளார். இதை அட்லீ சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.





