தாயின் கருவறையில் இருந்து கை தட்டிய குழந்தை – வீடியோ!!

774

hqdefault

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண், குழந்தையை தாலாட்டி பாடல் ஒன்றை பாடினார், அப்போது அந்த பாடலை கேட்டு கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை டாக்டர்கள் ‘அல்ட்ரா சவுண்ட் scan ’ மூலம் படம் பிடித்தனர். இந்த காட்சிகளை அந்த பெண்ணின் கணவர் வீடியோவாகவும் பதிவு செய்தார்.

இதுபற்றி ஜென் கார்டியனல் கூறுகையில், தனது குழந்தை 3 முறை கை தட்டியது ஆச்சரியமான நிகழ்வு என்றும், இதை தன்னால் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். கருவறையில் இருக்கும் குழந்தை கை தட்டும் 15 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. அதை ஒரே நாளில் மட்டும் 48 ஆயிரம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.