யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

557

1

யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் 3 சந்தேக நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் நேற்று மாலை 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றய தினம் மாலை 8.30 மணியளவில் யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் 3 நபர்கள் குறித்த கஞ்சா பொதிகளை கை மாற்றுவதற்காக நின்றிருந்த நிலையில், புலனாய்வுத் துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 26கிலோ கஞ்சா மற்றும் 3 கைத்தொலைபேசிகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளது.

2