வவுனியாவில் கொலை செயப்பட்ட மாணவியின் இறுதிச்சடங்கு : ஒன்று திரண்ட கல்விச் சமூகம்!!(படங்கள், காணொளி)

1227

 
வவுனியாவில் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விபுலானந்தா கல்லூரியின் மாணவி கெங்காதாரன் கரிஷ்ணவியின் இறுதி அஞ்சலி இன்று(19.02.2016) காலை மாணவியின் வீட்டில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி நிகழ்த்தியதுடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் பொது அமைப்புக்களின் சார்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மாணவியின் வீட்டிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக விபுலானந்தாக் கல்லூரியினை வந்தடைந்து சிறிது நேரம் பாடசாலையின் நின்று அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஊடாக சென்ற ஊர்வலத்தில் பெண்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

20160219_093628 20160219_100309 20160219_100312 20160219_100541 20160219_100546 20160219_101813 20160219_102012 20160219_102440 20160219_102526 20160219_102555 20160219_102558 20160219_102606 20160219_103606 20160219_103611 20160219_105723 20160219_110327 20160219_110444 20160219_110642 20160219_110756 20160219_111224 20160219_111621 20160219_111623 20160219_111655 20160219_111759 20160219_112153 20160219_112317 20160219_112321 20160219_112418 20160219_112425 20160219_112431 20160219_112435 20160219_112929 20160219_112957 20160219_113554 20160219_113558 20160219_113604 20160219_113607 20160219_113611 20160219_113615 20160219_113648 20160219_113651 20160219_113655 20160219_113659 20160219_115005 20160219_115030 20160219_115122 20160219_115204 20160219_115209 20160219_115213 20160219_115221 20160219_115224 20160219_115230 20160219_115308 20160219_115315 20160219_115348 20160219_115350 20160219_115429 20160219_115537 20160219_115649 20160219_115656