சர்வதேச அளவில் 28.7 இலட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டோ!!

261

Car

டொயோட்டோ நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த 28.7 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டொயோட்டோ கார்களில் சீட் பெல்ட்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் RAV4 வகை SUV கார்களில் விபத்தின்போது பின்புற இருக்கை சீட் பெல்ட் குறைபாட்டால், கனடாவில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அமெரிக்க ஓட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, டொயோட்டோ நிறுவனம் கடந்த ஜூலை 2005, ஆகஸ்ட் 2014 மற்றும் ஒக்டோபர் 2005, ஜனவரி 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்த RAV4 ரக கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.

மேலும், ஒக்டோபர் 2005 மற்றும் ஜனவரி 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானில் விற்பனையான Vanguard ரக கார்களும் திரும்பப் பெறப்படவுள்ளன.

மொத்தம் 28.7 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்பட்டு சீட் பெல்ட் கோளாறு சரிசெய்து தரப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கார்கள், கோளாறு, சீட்பெல்ட், டொயோட்டோ, திரும்பப் பெறுகிறது