வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

577

 
வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (18.02.2016) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.த.பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக G.T.லிங்கநாதன் (வடமாகாணசபை உறுப்பினர்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக N.சுபசிங்க (உதவிக் கல்விப்பணிப்பாளர் – உடற்கல்வி), ஜனாப்.அகமட் முகமட் ஸீபைர் (இணைப்பாளர் உடற்கல்வி), ஜூட் பரதமாறன் (ஆசிரிய ஆலோசகர்), ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் உள்ள சங்கிலியன், எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் இல்லங்களில் க.சுப்பிரமணியம் ஆசிரியரின் தலைமையிலான எல்லாளன் இல்லம் இறுதியாக முதலாம் இடத்தினை பெற்று வெற்றிக்கிண்ணத்தினை தட்டிச்சென்றது.

IMG_1463 IMG_1465 IMG_1472 IMG_1497 IMG_1512