
தனது 67 வயது கணவர் 32 வயது பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மாதவமோகன் (67) என்பவர் மனைவி, ஆனந்தி, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் பொலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், என் கணவருக்கு 32 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது.இதை நேரில் பார்த்த நான் தட்டிக்கேட்டேன். இதையடுத்து, அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர்.மேலும் அந்தப் பெண்ணின் கணவர் பெயருக்கு சொத்துகளை என் கணவர் எழுதி வைத்துள்ளார்.
எனவே, என் கணவர் மற்றும் அந்தப்பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இதையடுத்து மாதவமோகன் மற்றும் அந்த 32 வயது பெண் மீது பொலிசில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும்போது, அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.





