
பதுளை – வெலிமடை பொலிஸ் பிரிவின் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான, பெலுங்கல – பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஒருவரே தீயில் கருகி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிமடை நீதவான் மரண விசாரணைகளை நடத்தியதுடன் பிரேத பரிசோதனைகளை பதுளை சட்டவைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார். தீக்காயங்களினால் இந்த மரணம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





