நாடு முழுவதும் புதிய இரத்ததான நிலையங்கள்!!

442

canstock25015633

நாடு முழுவதும் புதிதாக 19 இரத்ததான நிலையங்களை ஸ்தாபிக்க உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் 13 நிலையங்களை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் திறந்து வைக்க உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

கொழும்பு வடக்கு, குணாகலை, பேராதனை ஆகிய போதனா வைத்தியசாலைகள், மாரவில, குளியாப்பிட்டிய, தங்காலை, பதவியை, தெஹியத்தகண்டி, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் சிலவற்றிலும் இந்த இரத்த தான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இந்த இரத்ததான நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.