வட்டவளை வனப்பகுதியில் தீப்பரவல்!!

720

hatton_1 (2)

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஐம்பது ஏக்கரைக் கொண்ட இந்த மானாபுல் வனப்பகுதியின் 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் இடம் பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதியில் எவராவது தீ வைத்ததால் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதா? அல்லது இயற்கையான காட்டுத்தீயா? என இதுவரை தெரியவில்லை என வட்டவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.