ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள்!!

1227

Asian-Development-Bank-Manila-EPA-2011-600x350

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகேஹிதோ நகாவோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்றிரவு அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

டகேஹிதோ நகாவோவின் இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகேஹிதோ நகாவோ ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் இன்று மாலை கைச்சாத்திடவுள்ளனர். இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். நியூஸிலாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.