தகதகக்கும் தங்க இலைகள் : சீன புத்தர் கோவிலில் அதிசயிக்கும் மக்கள்!!

384

golden_tree_003

சீனாவில் 1400 வயதுடைய ஜிங்கோ மரம், தனது தங்க மஞ்சள் நிற இலைகளை ஆயிரக்கணக்கில் சுற்றிலும் உதிர்த்து, ஒரு பொன்மேடையில் நிற்பது போல காட்சியளிக்கிறது. இது அங்குள்ள மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் சீனாவின் பல பகுதியிலிருந்தும் வந்து தினமும் பார்த்து வியந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டிலும் நவம்பர் மாத நடுவில் அதிகமான இலைகள் உதிர்கின்றன. அவைகள் மரத்தை சுற்றி மின்னும் மஞ்சள் கடல் போல காட்சியளிப்பது ஒரு மரம் என்பதை தாண்டி மர்ம அழகில் ஜொலிக்கிறது.மலர்களுக்கு கூட இவ்வளவு அழகிய நிறம் இருக்குமா, என மயங்க வைக்கிறது, உதிர்ந்து செறிந்து கிடக்கும் இலைகளின் வனப்பு.

உதிர்ந்த இலைகளை கூட்டி ஒதுக்காமல் கண்காட்சி ஆக்கியிருப்பது இந்த ஒரு மரத்துக்கு மட்டுமான பெருமை.பூக்கும் வசந்தகாலத்தில்தான் தாவரங்களின் மகத்துவம் புலப்படும். முரணாக, இந்த கிங்கோ மரம் இலையுதிர்காலத்தில் போற்றப்படுகிறது.ஸோங்னன் மலை மீது அமைந்துள்ள கு கானியின் புத்தர் கோவில் முற்றத்தில்தான் இந்த மரத்தின் 1400 ஆண்டுகால இலைகள் அர்ச்சனை நடக்கிறது.

ஜிங்கோ மரங்கள் பொதுவாக எந்த பருவகாலத்தையும் சமாளிக்க வல்லது. இந்த மரங்கள் 200 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வரும் பாரம்பரியம் கொண்டது. டைனோசர் காலத்தோடு நம்மை தொடர்புபடுத்துகிறது.ஜிங்கோ இன மரங்களை நீண்ட ஆயுள் மற்றும் பாரம்பரியத்தால் ’வாழும் படிமங்கள்’ (Living fossil) என்று அழைப்பது வியப்பல்ல.

golden_tree_002

golden_tree_004