வவுனியாவில் மாணவியின் கொலையைக் கண்டித்து கர்த்தால் : வவுனியா முற்றாக முடங்கியது!!

547

 
கடந்த 16.02.2016 அன்று உக்குளாங்குளத்தில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதிவேண்டியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியும் இன்று வவுனியாவில் பூரண கர்த்தால் நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து விபார ஸ்தாபனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகள் பேரூந்துகள் உட்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

தூர இடங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளும் தனியார் பேரூந்துகளும் மட்டுமே இயக்கப்படுகிறன.

வவுனியா நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமையால் பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை மிகக் குறைவாக காணப்பட்டது. வங்கிகள் எதுவும் இயங்கவில்லை.

இது தவிர பூந்தோட்டம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம், பண்டாரிக்குளம், இறம்பைக்குளம் உட்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே சில இடங்களில் நடுவீதியில் டயர்கள் போடப்பட்டு தீயிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி வவுனியாவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

10656293_451635755029745_773749155_n 12053260_451638168362837_194286082_n 12498442_451639985029322_1244685936_n 12498448_451639995029321_480089122_n 12516278_451635731696414_452054924_n 12527695_451635615029759_387903315_n 12596458_451640058362648_2078633917_n 12665650_451639971695990_1843426784_n 12665659_451637008362953_1600442261_n 12746382_451637098362944_2098792058_n 12767225_451635538363100_2051977298_n 12767300_451635708363083_40466687_n 12767623_451630135030307_408394115_n 12767716_451630431696944_586917431_n 12769380_451640128362641_1682837493_n 12769494_451635525029768_446445568_n 12769522_451635718363082_1987966801_n 12769575_451632698363384_663480126_n 12781976_451635618363092_1086460705_n 12782053_451639895029331_1227782353_n 12782103_451632708363383_1940314527_n 12782158_451638035029517_1203010281_n 12782203_451632608363393_687032358_n 12782227_451632778363376_1962759767_n 12782247_451640115029309_674731721_n 12782329_451632681696719_125197261_n 12782549_451630221696965_656787782_n 12784285_451636855029635_419194141_n 12784350_451637925029528_52863576_n 12784362_451630488363605_1237551032_n 12784362_451635795029741_1419011042_n 12784422_451635675029753_991460016_n 12784429_451632771696710_1572776036_n 12784593_451630525030268_1985360584_n 12784640_451635698363084_769904978_n 12784787_451635791696408_1346621842_n 12784789_451639841696003_865502786_n 12788170_451640081695979_2098280296_n 12788235_451635788363075_1063433219_n 12788247_451630278363626_743097111_n