போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் 551 மாணவர்கள் கைது!!

631

arrest (1)

போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் 551 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாய்மொழி மூல பதிலை எதிர்பார்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 551 மாணவர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூன்று மாத கால உளவியல் சிகிச்சைக்காக கண்டியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.