தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார் நளினி!!

664

1166001559Nalini

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வரும் நளினி, மறைந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பரோலில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்தார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வந்த நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று காலமானார்.

அவரது உடல் நெல்லையில் இருந்து சென்னை கோட்டூரில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டதை அடுத்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சென்னை வந்தார். இறுதி சடங்கு முடிந்த பின்னர் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.