
கம்பஹா, ஹெனகம மத்திய பாடசாலையில் 13 ஆவது தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை தாக்கிய சக மாணவன் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாணவர்கள் இடையே காணப்பட்ட கோபமே இந்த தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





