வவுனியாவில் திருவள்ளுவர் தினம்!!(படங்கள்)

620

 
தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று(25.02.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அடியில் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடை பெற்றது .

இந்த நிகழ்வில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு பஸ்தியாம்பிள்ளை, ஆசிரியர்கள் ஐ.கதிர்காமசேகரன், இந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற அதிபர் தேசமான்ய சிவஞானம், ஓய்வு பெற்ற அரச ஊழியர் திரு நா.நடராசா, வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), கவிஞர் மாணிக்கம் ஜெகன், பிரபல வர்த்தகர் சிவசுப்பிரமணியம், விக்னா, சமூக ஆர்வலர்கள் யோகா, பிரதாபன், அன்ரு உட்பட இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் .

மலர் மாலை அணிவித்து ,மலர் தூவி திருவள்ளுவருக்கு வணக்கம் செய்த பின் தலைமை உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் வள்ளுவரின் பெருமைகளை நயம்பட உரையாற்றினார். அவரின் உரையின் பின்னர் நிகழ்வின் ஏற்பாட்டாளர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது

784_1713312705550116_6068409747275191244_n 6885_1713315408883179_7290107752868190244_n 10157145_1713312875550099_8484468892925266901_n 10351372_1713315022216551_7327513261341583369_n 10370374_1713315132216540_9054195333515154579_n 10438519_1713315202216533_8556730107575372563_n 10492164_1713313152216738_1849472329634105705_n 12115523_1713312582216795_3383357900062267258_n 12376782_1713312928883427_5727078104642706864_n 12512285_1713312608883459_6287662637167538432_n 12718312_1713312502216803_8172330537200667105_n 12741991_1713315465549840_7699579106367541554_n 12742063_1713312788883441_8247323551371412717_n 12742160_1713315542216499_3658053939143042620_n 12742548_1713315295549857_2686602312773955765_n 12742691_1713313052216748_5068109173542709443_n 12743726_1713315052216548_315497011880921423_n 12744172_1713312672216786_4865899332564888176_n 12744210_1713312392216814_1538688710582381825_n 12744232_1713312762216777_4923041730431058004_n 12745495_1713312818883438_416378259621488516_n 12745591_1713312742216779_3158276568395149087_n