மகளை வல்லுறவிற்கு உட்படுத்தி வந்த தந்தைக்கு விளக்கமறியல்!!

549

1 (53)

தனது மகளை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்தி வந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான தந்தை ஒரு­வரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார். கம்­பளை போவலை பகு­தியில் இடம்­பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய ­வ­ரு­வ­தா­வது;

சந்­தேக நப­ரான இரா­ணுவ வீரரின் முதல் மனைவி குடும்ப வறுமைக் கார­ண­மாக வெளி­நாடு சென்­றி­ருந்த நிலையில் அப்­பொ­ழுது 12 வயது சிறு­மி­யாக இருந்த பாதிக்­கப்­பட்ட 17 வயது யுவதி சந்­தேக நப­ரினால் தொடர்ந்து வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ள­தா­கவும் அக்­காலப் பகு­தியில் ஒரு­முறை மேற்­படி சிறுமி கர்ப்­ப­முற்­றதை­யடுத்து சந்­தேகநபர் 18 ஆயிரம் ரூபா கொடுத்து சட்­ட­வி­ரோத கரு கலைப்பு நிலை­ய­மொன்றில் கரு­க­லைப்பு செய்­த­தா­கவும் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. மனைவி வெளி­நாடு சென்­றதன் பின்னர் சந்­தேக நபர் மாவ­னெல்லை பகு­தியில் பிரி­தொரு பெண்ணை திரு­மணம் செய்து மூன்று குழந்­தைகள் உள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

சந்­தேகநபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்­த­மை­யினால் சகித்­துக்கொள்ள முடி­யாது பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது பாட்­டி­யுடன் வந்து கடந்த திங்­கட்­கி­ழமை கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.இத­னை­ய­டுத்தே மேற்­கண்ட உத்­த­ர­வினை நீதிவான் பிறப்­பித்தார்.

கம்­பளைப் பிர­தே­சத்தில் கடந்த இரு­வார கால இடை­வெ­ளிக்குள் இடம்பெற்ற மூன்றாவது பாலியல் வல்லுறவு சம்ப வம் இதுவாகும். இதில் இரண்டு சம்ப வங்கள் பெற்றத் தந்தையர்களாலும் ஒரு சம்பவம் கூட்டுவல்லுறவு என்பதும் குறிப் பிடத்தக்கது.