செட்டிகுளம் கல்லாறு சித்திவிநாயகர்வித்தியாலய மாணவர்கள் நேற்றைய தினம் (24.02.2016) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதி கோரியே இவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பெண் பிள்ளைகளாக பிறப்பது எம் குற்றமா எம்மை வாழவிடுங்கள், இன்று ஹரிஸ்ணவியின் நாளை நாமா என்ற வாசங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.