இறந்துபோன மகளின் கருவை சுமக்கும் தாய்!!

331

baby-in-womb

லண்டனில் இறந்துபோன மகளின் கருவை சுமப்பதற்கு தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லண்டனில் வசித்து வந்த Lord Justice Treacy, Lord Justice Floyd தம்பதியினரின் மகளுக்கு 28 வயது இருக்கையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து, கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்துள்ளார், இந்நிலையில் இவர்களது மகள் இறப்பதற்கு முன்னர், அவரின் கரு முட்டையானது Human Fertilisation and Embryology Authority (HFEA) – யில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மகளின் அகால மரணத்திற்கு பின்னர், அவளுக்காக ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர், மகளின் கருமுட்டையை தனது வயிற்றில் சுமப்பதற்கு 60 வயது தாயார், HFEA – மையத்தை அணுகியபோது, அவருக்கு கருமுட்டை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் உங்கள் மகளுடைய கருமுட்டை வழங்கப்படமாட்டாது, ஏனெனில் அவர் இறப்பதற்கு முன்னர், இவ்வாறு ஒரு விடயத்தை எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இந்த தம்பதியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், எனது மகள் எங்களிடம் அவளுடைய குழந்தையை சுமக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள் என்றும் அதற்கான அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.இந்த வழக்கு முடிவில், தாயாருக்கு தனது மகளின் கருவை சுமக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, முதல் முறையாக 60 வயது பெண்மணி ஒருவர் இறந்துபோன மகளின் கருவை சுமப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.