உலகளலில் கடல் மட்டம் உயர்வு : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

359

sea_level_rising-550x300

27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம் உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொழில்நுட்ப புரட்சி காரணமாக உலகம் வெப்பமாவதால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதானல் அவ்வப்போது இயற்கை பேரிடர்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் உலக அளவில் கடல்களின் நீர்மட்டமும் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 1900 முதல் 2000வது ஆண்டு வரை 14 சென்டிமீட்டர் அல்லது 5.5 இஞ்ச் அளவு கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது. கடந்த 3,000 ஆண்டு அளவில் நோக்கும்போது, 20-ஆம் நூற்றாண்டில்தான் கடல் நீர்மட்டம் அபரிமிதமான அளவு உயர்ந்திருக்கிறது.

இந்த நீர் மட்டத்தின் அளவு 20ம் நூற்றாண்டின் பாதியில் இருந்து உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது 27 நூற்றாண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பூமியின் சராசரி வெப்ப நிலை, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததைவிட தற்போது 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.