இணையதளங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் குழந்தைகளுக்கென்று Kiddle என்ற பிரத்யேக தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.இன்றைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்தாத நபர்களை காண்பது அரிது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு வகையில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
குறிப்பாக உலகில் நடக்கும் விடயங்களை விரல் நுனியில் தெரிந்து கொள்கிறார்கள். அதேநேரம் அனைத்து வகையான நல்ல, கெட்ட விடயங்களை கற்றுக் கொள்ளலாம்.ஒரு மனிதன் அறிவாளியாக மாறுவதற்கும், குற்றவாளியாக மாறுவதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்நிலையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கூகுள் Kiddle என்ற தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.கார்ட்டூன் கதாபாத்திரங்கள், விண்வெளி நட்சத்திரங்கள் என குழந்தைகளை வெகுவாக கவரும் வண்ணம் வடிமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபாசம்/வன்முறை தொடர்பான சொற்களை தேடினால், உங்கள் தேடல் தவறான சொற்களை கொண்டுள்ளது, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் என்று பதிலளிக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் கல்விக்கு துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.