இணையத்தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல்!!

441

BTgrodpyc

இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.இலங்கையில் இயங்கி வரும் செய்தி இணையத்தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஊடக அமைச்சில் செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு சகல செய்தி இணையத்தளங்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியின் பின்னர் பதிவு செய்யப்படாத அனைத்து அனைத்து இணையத்தளங்களும் சட்டவிரோதமான இணையத்தளங்களாகவே கருதப்படும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.