கிராமத்தின் மொத்த ஆண்களுக்கும் தூக்கு தண்டனை விதித்த நாடு: காரணம் என்ன?

364

iranian_village_005

கிராமம் ஒன்றின் அனைத்து ஆண்களையும் தூக்கு தண்டனை வழங்கி விதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அங்குள்ள மனித உரிமைகள் குழுவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தின் ஆண்களுக்குதான் அந்த நாட்டின் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவம் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் மொத்தமும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஈரான் அரசு,போதை மருந்து கடத்தலுக்கு அளிக்கப்படும் தண்டனையை அந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சீர்செய்ய முடியவில்லை,இதனால் வாழ்வாதாரம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர்.இதே காரணத்தை முன்னிறுத்தியே பல நூறு ஆண்களை ஆண்டு தோறும் ஈரான் அரசு தூக்கிலேற்றுவதாக அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் நின்றுவிடப்போவதில்லை என தெரிவித்துள்ள அரசின் அதிகாரிகள்,ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை விதித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரானில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் 75 சதவிகிதம் பேர் போதை மருந்து கடத்தலில் தொடர்புடையவர்கள் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கின்றது.2015 ஆம் ஆண்டு தூக்கிலேற்றப்பட்ட 947 நபர்களில் 600 பேர் போதை மருந்து கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்கள் என பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கின்றது.