வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 இலங்கை அகதிகள் கைது!!

469

arrests

தமிழகத்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற, நான்கு இலங்கை அகதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி பொலிசார், நேற்று அதிகாலை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பெத்திக்குப்பம் சந்திப்பில் நான்கு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின், அவர்கள், வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டதாக பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நான்கு பேர் மீதும், கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவிசந்திரன் (35), பிரதாப் (28), கிஷோர்குமார் (24), லோகேஷ்வரன் (24), என்பது தெரிய வந்தது.