காப்புறுதித் தொகைக்காக பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டுகள் சிறை!!

304

jail

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர், எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32). இவரது பெற்றோரும், ஒரு சகோதரரும் கடந்த 2014ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.

தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு தொகையை பெற்றார். தாயாரின் மரணத்துக்காக அவர் ஆயுள் காப்பீடு தொகையை பெற முயற்சித்தபோதுதான், அவர் காப்புறுதித் தொகையைப் பெறுவதற்கு தனது பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததும், சம்பவத்தின்போது, அவரது இரு மகள்கள் காயம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரோடாஸ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததற்காக அவர் மீது கவுதமாலா சிட்டி நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம், அவருக்கு 166 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தால் போதும்.