மின்சார விநியோகத்தடை காரணமாக 600 மில்லியன் ரூபா வரை நட்டம்!!

516

CEB

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட மின்சார தடையின் காரணமாக சுமார் 600 மில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார தடை தொடர்பாக மின்சார சபையினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இந்த மின்சாரத்தடை ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஏற்பட்ட மின்சார விநியோகத்தடை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு நீடித்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் சில மணித்தியாலங்களுக்கு பல இடங்களில் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கு இடம்மளிக்க வேண்டாம் என பிரதமர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.