7 குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கழுத்தறுத்துக் கொன்ற நபர்!!

1080

Murder

மகாராஷ்டிராவில் நபர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கசர்வாடி பகுதியை சேர்ந்த ஹாசன் அன்வர்(35) என்பவரின் வீட்டில் நடைபெற்ற குடும்பவிழாவில் கலந்துகொள்வதற்காக உறவினர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை, தனது 4 குழந்தைகள், 6 சகோதரிகள் உட்பட 14 பேரை கழுத்தை அறுத்து கொடூரமாக ஹாசன் கொலைசெய்துள்ளார்.

பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விரைந்து வந்து, உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஹாசனின் கையில் பெரிய கத்தி இருந்துள்ளது. இதனால், தனது குடும்ப உறுப்பினர்களை அவர், கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், கழுத்தறுக்கப்பட்ட நபர்களின் ஒருபெண் தற்போது உயிர்தப்பியுள்ளார், அவரிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான உண்மைக்காரணம் வெளிவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் கசர்வாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.