ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!!

569

1539627189Untitled-1

ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘செங்கை ஆழியான்’ என்கிற கலாநிதி கந்தையா குணராசா (வயது 75) நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சுகயீனம் காரணமாக காலமானார்.

1941 ஜனவரி 25ம் திகதியன்று பிறந்த செங்கை ஆழியான், ஈழத்து வரலாறு சார் புனைகளையும், ஆய்வுகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றில் அவர் எழுதிய தொடர்கதையான ‘கிடுகுவேலி’ வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானது. அவரது ‘வாடைக் காற்று’ மற்றும் ‘புதினம்’ ஆகிய படைப்புக்கள் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.