அரிய நாளான லீப் வருடத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுள்!!

291

leap-year-2016

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினமான பெப்ரவரி 29 லீப் வருடத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29ஆம் திகதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 29 ஆம் திகதியான இன்றைய நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.