வவுனியாவில் அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான அவசர கலந்துரையாடல்!!

764

Meeting

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான அவசர கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் எதிர்வரும் 04.03.2016 வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொலிஸ், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.