
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக கப்புகெதர அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 26 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பாக யுவராஜ் சிங் 35 ஓட்டங்களையும் விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
விராட் கோலி இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.
இப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாவது கேள்விக்குறியாகியுள்ளது.





