தொலைக்காட்சி நேரலையில் மோதிக்கொண்ட சீமான் மற்றும் அருணன்!!(வீடியோ)

645

Seeman

தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் கலந்துகொண்ட சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அருணன் ஆகியோர் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் விவாத நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தரப்பினரை ஒரே இடத்தில் அமர செய்து மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க செய்கின்றன. எனினும் அவ்வப்போது இது போன்ற நிகழ்ச்சிகளில் சலசலப்பு ஏற்படுவதுண்டு. இது போன்று சலசலப்பு தான் நேற்று ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரலை நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் சீமான், பாஜக வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருணன் மற்றும் திமுகவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆகியோர் பங்கேற்றனர்

விவாதத்தின் போது சீமான் வேறு இடத்தில் இருந்துள்ளார். இந்த விவாதத்தின் போது அதிமுக, திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்ந்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையில் ஆவேசமடைந்த சீமான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை நோக்கி ‘ஏய் என்னய்யா லுசு மாதிரி பேசுற’ என பேசியுள்ளார்.

அருணுனும், ‘நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லுசு ங்கிற’ என கேட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

நேரலை நிகழ்ச்சியில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.