நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென உயிரை விட்ட 9 வயதுச் சிறுமி : நடந்தது என்ன?

593

Flight

சீனாவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 9 வயதான சிறுமி ஒருவர் நடுவானில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஹாங்காய் நகரில் இருந்து லூப்தான்சா என்ற பயணிகள் விமானம் ஜேர்மனியில் உள்ள முனிச் நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவரும் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்திலேயே சிறுமிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி திடீரென மயக்கமுற்றாள்.

சூழ்நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை திசை திருப்பி ரஷ்யாவில் உள்ள Yemelyanovo என்ற விமான நிலையத்தில் நள்ளிரவு 1.22 மணியளவில் தரையிறக்கினர்.

முன்னதாக, சிறுமியின் உடல்நிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தில் அம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. விமானம் தரையிறங்கிவுடன் சிறுமியை அவசரமாக வெளியே கொண்டு வந்து அம்புலன்ஸில் ஏற்றினர்.

ஆனால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் சிறுமியின் நாடியை சோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமியுடன் பயணித்தவர்கள் மற்றும் விமானத்தில் சிறுமி ஏறியபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளும் பொலிசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.