மலேசியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH370 விமானத்தின் பாகங்கள் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதன் பின்னர், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது என்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிந்துவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதன் பின்னர், அதன் பாகங்களை தேடும் பணி இன்றுவரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆபிரிக்காவின் Mozambique என்ற கடற்கரை பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பாகங்களை ஆராய்ச்சிக்காக மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இதுவரை விபத்துக்குள்ளான விமானங்களில் MH370 விமானத்தின் பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவை மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.






