வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)

506

 
வவுனியாவில் இன்று (04.03.2016) காலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து குட்செட் வீதியினூடாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியினைக் கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த முதியவர் (பேரம்பலம் சிவலிங்கம், வயது 80) வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மோட்டார் வண்டியில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC07583 DSC07584 DSC07585 DSC07586 DSC07587 DSC07588 DSC07589 DSC07590 DSC07591 DSC07592 DSC07595