14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 31 வயது குடும்பஸ்தர் கைது!!

473

arrest

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான 31 வயதுடைய குடும்பஸ்தரை இன்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அயல் வீட்டில் வசிக்கும் குறித்த சிறுமியை சந்தேகநபர் ஆசைவார்த்தை காட்டி கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி பிறிதொரு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை (03) மாலை 03.00 மணியளவில் குறித்த நபர் சிறுமியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் தாயார் சந்தேகம் கொண்டு வினவியுள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த விடயத்தை தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி குறித்த நபரை கைதுசெய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.