
வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு உமாமகேஸ்வரன் வீதியில் உள்ள ரொக்கட் விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் (கோவில்குளம் இந்து கல்லூரிக்கு அருகாமையில்) 3 மணிக்கு ஆரம்பமாகும்.
இதன் போது கடந்த கால நிகழ்வுகள், கூட்டறிக்கைகள், கணக்கு அறிக்கைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.
எனவே இந்நிகழ்விற்கு முன்னாள் ரொக்கட் விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டங்கள் நீண்ட காலமாக நடைபெறவில்லை. இதேவேளை வவுனியா மண்ணில் பிரபல்யமாக விளங்கிய ரொக்கட் விளையாட்டு கழகத்தினை மறுசீரமைப்பு செய்ய சகலரும் முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.





