
ஆசியக் கிண்ணத்தில் கடைசி லீக் போட்டியில் உமர் அக்மல் மற்றும் சப்ராஸ் அஹமட்டின் அதிரடி ஆட்டத்தினால் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.
ஆசியக் கிண்ணத்திலிருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் நேற்று நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சந்திமால் 58 ஓட்டங்களையும், டில்ஷான் 75 ஓட்டங்களையும் விளாசினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பாகிஸ்தான் அணி சார்பாக அதிரடியாக ஆடிய ஷர்ஜில் கான் (31), உமர் அக்மல் (48), ஷர்பாஸ் அஹமட் (38) ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
நாளை ஞாயிற்றுக் கிழமை பங்களாதேஷ் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





