
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அனைத்து விஷேட பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியமானது இந்த ஆண்டு 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன ஊடாக இந்தத் தீர்மானமானது அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்ப்ட்டுள்ளதாக அந்த தகவல்கள் கேசரியிடம் சுட்டிக்காட்டின.
2016 ஆம் அண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையவே இந்த எரிபொருள் மானியமானது 15 வீததால் குறைக்கப்ப்ட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சுமார் 43 பிரிவுகளில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அத்தியட்சர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களின் கவனத்திற்கு இந்த எரிபொருள் மானிய குறைப்பு பட்டியல் அனுப்பட்டுள்ளது.





