
மகாராஷ்டிராவில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கும், சிறுமிக்கும் பஞ்சாயத்தார் பிரம்படி கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பன்வாட் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் 13 வயதாகும் தனது மகளை கடந்த 4 மாதமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில், இதனை அறிந்த கிராமத்தினர் அவருக்கு பிரம்படி தண்டனையும், அபராதமும் விதித்துள்ளனர்.மேலும், அவரால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி, கர்ப்பிணியாக உள்ள பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர்.
அந்த இரண்டு பேரையும் கயிற்றால் கட்டி கிராமத்தினர் முன்பு அவர்கள் பிரம்படி கொடுத்துள்ளனர்.கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரு சிறுமியை செய்யாத தவறுக்காக வதைத்த சம்பவம் மனித நேய ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது பொலிசார் அக்கிராமத்தில் இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





