வறட்சியான காலநிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்!!

600

Hot

நாட்டில் தற்போது காணப்படும் வறட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பருவபெயர்ச்சி காலநிலை நிலவுவதால் இதன்போது மாலை நேரங்களில் நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காலநிலை மத்திய நிலையத்தின் அதிகாரி மலித் பிரனாந்து தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், நுவரெலிய மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.