வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு சிவகாமி பவுண்டேசன் நிறுவனத்தினாரால் நேற்று (06.03.2016) ஆடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன.
இன் நிகழ்வின் போது எமது செய்தியாளரின் மனதினை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றும் நடைபெற்றது
சிறுவன் ஒருவன் கண்கலங்கியவாறு பின்வருமாறு தெரிவித்தான்
“எனக்கு ஐந்து வயது, நான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இங்குதான் வசித்து வருகின்றேன். எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் அம்மாவிற்கு கஸ்டம் என்று என்னை இங்கு சேர்த்துவிட்டார்” எனத் தெரிவித்தான்.






